சுந்தர் சி & விஷால் இணையும் ‘ACTION’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
விஷால் நடித்த மத கஜராஜா மற்றும் ஆம்பள என 2 படங்களை இயக்கினார் சுந்தர் சி.
இதில் மதகஜராஜா படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி.
இதில் தமன்னா நாயகியாக நடித்து வருகிறார்.
ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க, ட்ரைண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்தவொரு முன்னறிப்பும் இன்றி தற்போது இப்படத்த பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்கு ஆக்ஷன் என பெயரிட்டுள்ளனர்.
இந்த ஆக்ஷன் படத்திற்கான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் என்ற இரட்டை சண்டை பயிற்சி இயக்குனர்கள் அமைத்துள்ளனர்.
ஏற்கெனவே சுராஜ் இயக்கிய கத்தி சண்டை படத்தில் விஷாலுடன் தமன்னா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது