சூப்பர்ஹிட் தமிழ் பாடலை ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்யும் பிரபுதேவா

1994ல் ஷங்கர் இயக்கிய படம் காதலன். பிரபுதேவா நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் நக்மா, வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. 
அதில் மனோ, ஸ்வர்ணலதா பாடிய முக்காலா முக்காபுல்லா என்ற பாடலை இப்போது தான் ஹிந்தியில் முக்கிய ரோலில் நடிக்கும் ஸ்ட்ரீட் டான்சர்-3 என்ற படத்திற்காக ரீமிக்ஸ் செய்து இன்னும் புதுமையான முறையில் நடனமாடப் போகிறாராம் பிரபுதேவா. மேலும், ரெமோ டிஸ்சா இயக்கும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார்