சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜாவின் சூப்பர் குத்தாட்டம்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் சூப்பர் டூப்பர் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா  நடைபெற்றது. விழாவில்
படக்குழு மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா  ஜே.ஏஸ்.கே சதீஷ்குமார். லிப்ரா ரவிந்தர் சந்திரசேகரன் போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்

இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டூப்பர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இந்துஜா. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் திரைப்பட இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர், அதன்பிறகு மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங் போன்ற பல படங்களில் நடித்தார். நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரெடுத்தவர் நடிகை இந்துஜா.

தற்போது விஜய்யின் பிகில் படத்தில் தமிழக பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்து வருகிறார். முன்னணி நாயகனுடன் திரையை பகிர்ந்துக்கொண்ட பொருமைக்கிடையில் தற்போது சூப்பர் டூப்பர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக இந்துஜா தற்போது கெத்து காட்டி இருக்கிறார் சூப்பர் டூப்பர் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

சூப்பர் டூப்பர் ட்ரைலரில் நாயகன் துருவா போலவே நாயகி இந்துஜாவும் மாஸ் காட்டி இருந்தார். படத்தில் அவர் வெயிட் கேரக்டரில் நடித்திருப்பது போலவே செம்ம குத்தாட்டம் ஒன்றையும் போட்டுள்ளார். ட்ரைலரில் இந்துஜாவுக்கு என என்ட்ரி காட்சிகள் எல்லாம் இருப்பதைப் பார்த்தால் இது ஹீரோயின் சென்ட்ரிக் படமோ என்ற ஐயம் எழுகிறது. ஷாலினி வாசன் தயாரித்துள்ள இப்படத்தை AK எழுதி இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த ஆக்‌ஷன் படமாக இப்படம் இருக்கும் என்று ட்ரைலர் நம்ப வைக்கிறது. பார்க்கலாம்.

இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்