சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை ரிலீஸ்;

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் முதன்முறையாக இயக்குனர்இ திரைப்படம் தர்பார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில்ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் சென்னையில் டிசம்பர் 7ஆம் தேதி வெளியானது. இந்த பாடல்கள் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் தர்பார் டிரைலர் நாளை டிசம்பர் 16ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் முருகதாஸ் அறிவித்தார். அப்போது போஸ்டர் ஒன்றும் வெளியிடவில்லை.

இதனை முன்னிட்டு இன்று தர்பார் பட ஆக்சன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நாளை மும்பையில் நடைபெறவுள்ள விழாவில் தர்பார் டிரைலர் வெளியாகிறது.

இதில் ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.