சூப்பர் ஸ்டாருடன் ஜெய்ப்பூர் பறந்தார் நயன்தாரா; வைரலாகும் படங்கள்

ஐயா படத்தை முடித்தவுடன் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனவர் நயன்தாரா.

இதனையடுத்து குசேலன், சிவாஜி படத்தில் ஒரு பாட்டு என ரஜினியுடன் நடித்தார்.

தற்போது முருகதாஸ் இயக்கிவரும் தர்பார் படத்தில் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில் ரஜினி போலீஸ் ஆபிசராக நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் கதைக்களம் மும்பையை சுற்றி நடப்பதால் அங்கேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 3வது கட்ட படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் நகருக்கு ரஜினி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் விமானத்தில் சென்றுள்ளனர்.

இந்த வீடியோ மற்றும் படங்களை சக பயணி ஒருவர் படம் பிடித்து வெளியிட அவை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.