சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இணையும் திரைப்படத்தின் வேலையை ஆரம்பித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தர்பார் திரைப் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணத்தால் ஊரடங்கு உத்தரவால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி விட்டார்களாம் இயக்குனர் சிவா.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பிரச்சினைகள் தீர்ந்த பிறகு அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

இந்த படப்பிடிப்பில் சில நாட்கள்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறாராம்.

என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனது 40 ஆண்டு கால நண்பர் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இந்தத் திரைப்படத்தை தயாரிப்பதுடன் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம் உலகநாயகன் கமலஹாசன்.

இளமை ஊஞ்சலாடுகிறது 16 வயதினிலே மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து தற்போது இருவரும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஊரடங்கு உத்தரவால் தனது அடுத்தடுத்த வேலைகளை வீட்டிலிருந்தே தொடங்கி விட்டாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதைப்போல் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் வேட்டையாடு விளையாடு 2 பாகத்தின் வேலைகளே ஒருபக்கம் கௌதம் வாசுதேவ் மேனன் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வந்த இந்தியன் டு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட பிறகு படப்பிடிப்பு மீண்டும் தூங்க வில்லை என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வைத்து லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கிவரும் திரைப்படம்தான் மாஸ்டர் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு பிரச்சினை தீர்ந்தவுடன் ரிலீசாகும் என தெரிகிறது.