சூப்பர் ஸ்டாரை அவரது இல்லத்தில் இயக்குனர் பாரதிராஜா சந்தித்தார் ..!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் சார்பில் பைரவி படத்தின் மூலம், நடிகர் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக பிரபலப்படுத்திய தயாரிப்பாளரும், கதாசிரியருமான கலைஞானத்திற்கு பாராட்டு விழா வருகிற ஆகஸ்ட் 14 தேதி மாலை 6மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, வீட்டிற்கு சென்று இயக்குனர் பாராதிராஜா அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற ரீதியில் பல்வேறு பேட்டிகளில் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வந்த இயக்குனர் பாரதிராஜா, ரஜினிகாந்தை வீடு தேடிபோய் அழைத்திருப்பது குறிப்பிடதக்கது.
இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அவர்கள் உடன் இருந்தார்.