சூப்பர் ஸ்டாரை கலாய்ப்பதா.? கடுப்பான கமல்ஹாசன்.; காட்சியை நீக்க கோமாளி பட தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்தார்

ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் முதன்முறையாக இணைந்துள்ள கோமாளி என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதீ இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

அதில், 16 வருடங்களாக கோமாவில் இருந்து மீள்கிறார் ஜெயம் ரவி.

எனவே அவரை நம்ப வைக்க “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு.

அதைப்பார்த்து ஜெயம் ரவி அதிர்ச்சியுடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த படத்தை தாங்கள் புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.

மேலும் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கமல் அவர்கள் அந்த டிரைலரை பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் பேசினாராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு பேட்டியில் கூறியதாவது…

“ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர் நோக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

அவரின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன்.

கோமாளி பட ட்ரெய்லரைப் பார்த்த கமல்ஹாசன் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் ரஜினி ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.