சூப்பர் ஸ்டார் பட்டம்; அப்போ சிம்பு, இப்போ விஜய்; சீமானுக்கு என்னதான் ஆச்சு.??
சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது என் தம்பி சிம்பு தான் என்று கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சீமான், ‘ ரஜினிக்கு அடுத்து, சூப்பர் ஸ்டார் யார் என்றால் என் தம்பி விஜய் தான். தற்போது ரஜினிக்கும் விஜய்க்கும் மட்டும் தானே போட்டி நிலவுகிறது.
ஆகவே, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான். உலகமே அதைத்தானே சொல்கிறது. சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை.’ என்று கூறினார்.
சில தினங்களுக்கு முன் சிம்பு தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுவதும், அதிலிருந்து சில நாள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுவதுமாக சீமான் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறார்..
முதலில் யார் சூப்பர் ஸ்டார் என்று நீங்களே தீர்மானித்து அப்புறமாக பேச வாருங்கள் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் சீமானை கலாய்த்து வருகின்றனர்











