சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் சிவா

‘தர்பார்’ படத்தினை தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக, சிவாவின் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் அடுத்ததாகக் கதையொன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். இடையே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே மீண்டும் ரஜினிகாந்த் நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது இயக்குநர் சிவா இயக்கத்திலேயே நடிக்க முடிவு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, நேற்று இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ரஜினிகாந்த். இதனால் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்த் – இயக்குனர் சிவா இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தன் பிறந்த நாளுக்கு முன்பாக படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளதால், அதற்குத் தகுந்தாற் போல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.