சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ வழியில் நஷ்டத்தை ஈடு கட்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி

உலக சினிமா வரலாற்றிலேயே தன்னுடைய பாபா படம் தோல்வியை தழுவியதால் தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

வேறு எந்த தயாரிப்பாளரும் நடிகரும் நஷ்டத்தை இதுபோல் ஈடுகட்டியதாக வரலாறு இல்லை.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவியும் தன்னுடை சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி தரவிருக்கிறாராம்.

நடிகர் சிரஞ்சீவி, நடிகை நயன்தாரா, நடிகை தமன்னா, மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், சுதீப் ஆகியோர் நடித்த ‘சைரா’ படம் தெலுங்கில் வெற்றி பெற்றாலும் மற்ற மாநிலங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.

மற்ற மாநிலங்களில் படத்தை வெளியிட்டவர்கள் நஷ்டம் அடைந்ததால் அவர்களுக்கு தயாரிப்பாளர் ராம்சரண் பணத்தை திருப்பி தரவுள்ளதாக சொல்லப்படுகிறது.