சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா முருகதாஸ் ஆகியோரின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க ‘தளபதி’(1991) படத்திறகு பிறகு சந்தோஷ் சிவன் அவர்கள் ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் பட மோஷன் போஸ்டரை நாளை நவம்பர்.7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.
இதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரையுலகில் உள்ள டாப் ஹீரோக்கள் வெளியிட உள்ளனர்.
தமிழில் கமல்ஹாசன் & தெலுங்கில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தியில் சல்மான்கான் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.