சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலக நாயகன் கமல்ஹாசனும் சினிமா துறையில் காலாவதியானவர்கள் தமிழக அமைச்சர்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது அவர் கூறிய காவிச்சாயம், திருவள்ளுவர், வெற்றிடம் போன்ற கருத்துக்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் கலைத்துறையில் 35 ஆண்டுகளாக இருந்து வருவது பாராட்டத்தக்கது என்றும். ஆனால் இருவரும் சினிமா துறையில் காலாவதியாகி விட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசியல் வெற்றிடத்தை ஏற்கனவே முதல்வர் பழனிசாமி நிரப்பிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!