சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்திப்ப

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ‘தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் நேற்று ரஜினியை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரை அடுத்து ரஜினியை இயக்க காத்திருக்கும் இயக்குநர்கள் பட்டியலில் இவருடைய பெயரும் இணைந்துள்ளதாக கூறப்டுகிறது.