சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நடிகை நயன்தாரா.
தர்பார் திரைப்படத்தை முடித்துவிட்டு தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.
விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இப்படத்தை இயக்க இமான் இசையைமத்து வருகிறார்.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்க முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்கிறார்
இந்நிலையில் இப்படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்வள் வந்துள்ளன.
இது உறுதியானால் அவர் முதல்முறையாக இந்த வேடத்தை ஏற்பது குறிப்பிடத்தக்கது.