சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி 2 திரைப்படத்தில் இயக்குனர் பி வாசு & ராகவா லாரன்ஸ் கூட்டணி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பி வாசு கூட்டணியில் உருவான மன்னன் உழைப்பாளி உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

இதையடுத்து இது கூட்டணியில் உருவான சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ல் வெளியாகிய தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது.

இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தை சிவாஜி பிலிம்ஸ் சார்பாக நடிகர் பிரபு அவர்கள் தயாரித்திருந்தார்.

இந்த சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா பிரபு நாசர் வடிவேலு ஆகிய உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சந்திரமுகி 2 திரைப்படத்தை உருவாக்க இயக்குனர் பி வாசு திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் இந்த திரைப்படம் தள்ளிக்கொண்டே போனது.

தற்போது இந்த சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசி வழங்கியுள்ளார்.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடிக்க வில்லை அவருக்கு பதிலாக கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வாசு இயக்க சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இந்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க தனக்கு அனுமதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி கூறி உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.