சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ படத்தின் வில்லன் குறித்த புதிய தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் பிரதிக்பாபர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகி 2’ திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ‘தர்பார்’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரதிக்பாபர், வில்லனின் மகனாக நடிக்கவுள்ளார்.