சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட ரிலிஸின் போது வரும் பெரிய தலைவலி வசூலில் பாதிப்பு ஏற்படுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகின்றது.

இந்த தர்பார் படத்தை பொங்கலுக்கு கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளும் நடந்து கொண்டு வருகின்றது, இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார்

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துக்கொள்ள இருக்கின்றார், தற்போது தர்பார் படத்தின் ரிலிஸில் ஒரு பிரச்சனை வந்துள்ளது.

ரஜினி காந்த்க்கு தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், தர்பார் வரும் போது மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பாலையா என முன்னணி நடிகர்களின் படங்களும் வருகின்றது.

இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் வசூல் தெலுங்கில் பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது