சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் எனது பணியை முடித்துவிட்டேன் – நடிகர் ஸ்ரீமன் .!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குநர் – ஏ.ஆர் முருகதாஸ்இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம்வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்தப் படம் குறித்து நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தர்பார்’ படத்தின் தனது பணியை முடித்துவிட்டதாகவும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பதற்கு பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டுக்களையும் ஆசிர்வாதத்தையும் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடிகர் ஸ்ரீமன், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘தீனா’ படத்திற்கு பிறகு ‘தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.