சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம ஏதோ ஒரு விசேஷம் உள்ளது – கிரிக்கெட் பிரபலம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று.

வருகிறது. அப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹேமங் பதானி ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பதானி தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் எவ்வளவு எளிமையானவர், அடக்கமானவர் என்பதை மற்றவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது நானே நேரடியாகப் பார்த்தேன். அவரிடம் ஏதோ ஒரு விசேஷம் உள்ளது. தலைவர் ரஜினிகாந்த்துடன் இருந்த இரண்டு நிமிடங்கள் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழ்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.