சூர்யாவின் என்.ஜி.கே’ படத்தில் இணையும் மற்றொரு பாடல் 

செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் என்.ஜி.கே’. யுவன் இசையமைத்துள்ள இந்த படம் வருகின்ற 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாடலாசிரியர் உமா தேவி தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பே பேரன்பே பாடலின் பெரும் வெற்றியினைத் தொடர்ந்து ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் மிகமுக்கிய தருணத்தில் இடம்பெறவுள்ள பாடலை எழுதுவதற்கு மீண்டும் இணைந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்