சூர்யாவின் காப்பான் படத்தில் பூர்ணா

காப்பான் பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. இதில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். அவரது பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் இன்னொரு முக்கிய நட்சத்திரமாக பூர்ணா இணைந்துள்ளார். சூர்யாவுடன் அவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும் பூர்ணாவின் கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.