சூர்யாவின் NGK’வை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது ‘என் ஜி கே’. இப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது.

சூர்யாவின் திரையுலக வரலாற்றில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இது அமைந்துள்ளது. படத்தின் ட்ரெயலர் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதா, படத்தின் மீதான் எதிர்பார்ப்பும் எகிற வைத்துள்ளது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.