சென்னைக்கு விரைந்தார் ‘தர்பார்’ நாயகன்

‘பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து சிறிய இடைவெளியில் ✈மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார் ரஜினிகாந்த். இதனிடையே இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.