சென்னையில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் வசூல் விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. எனினும், வசூலுக்கு தற்போது வரை எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் இப்படம் மூன்று நாட்களில் ரூ 1.85 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.