சென்னையில் மேலும் 10 திரையரங்குகள் – பிவிஆர்

சென்னையில் ஒரு பக்கம் பழைய தியேட்டர்கள் மூடப்பட்டுக் கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் புதுப் புது ‘மால்’ தியேட்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் பிவிஆர் நிறுவனம் சென்னை, அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் புதிதாக 10 தியேட்டர்களைத் திறக்கிறது.

இன்று இரவுக் காட்சி முதல் 3 தியேட்டர்களில் அங்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விரைவில் மற்ற தியேட்டர்களும் திறக்கப்படும்.

ஏற்கெனவே பிவிஆர் சினிமாஸ், சென்னையில் அமைந்தகரை, வேளச்சேரி, பல்லாவரம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் தியேட்டர்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தையும் பிவிஆர் நிறுவனம் 850 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்தியாவில் பல ஊர்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் இந்தத் துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது.

அண்ணா நகரில் திறக்கப்பட உள்ள பிவிஆர் சினிமாசில் 10 தியேட்டர்களில் மொத்தம் 2594 இருக்கைகள் உள்ளன.

இதன் மூலம் சென்னையில் அதிக தியேட்டர்களை நடத்தும் நிறுவனமாக பிவிஆர் சினிமாஸ் உயர்ந்துள்ளது.