ஜாக்பாட் – திரை விமர்சனம்

நடிப்பு – ஜோதிகா, ரேவதி, ஆனந்தராஜ் யோகி பாபு மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர்

தயாரிப்பு – 2டி என்டர்டெயின்மென்ட் சூர்யா

இயக்கம் – கல்யாண்

இசை – விஷால் சந்திரசேகர்

மக்கள் தொடர்பு – யுவாராஜ்

வெளியான தேதி – 2 ஆகஸ்ட் 2019

ரேட்டிங் – 2.5/5

தமிழ் திரைப்படங்களில் காமெடி படங்களை இயக்க சில இயக்குனர்கள்தான் இருந்தார்கள். அதிலும் இயக்குனர் சுந்தர் சி படங்கள் என்றால் நம்பி திரையரங்குக்கு பார்க்கச் சென்றால் நிச்சயம் அனைத்தையும் மறந்து கலகலவென்று சிரித்துவிட்டு வரலாம் என்ற நிலை இருந்தது. இப்போது காமெடி படங்களை இயக்கும் இயக்குனர்கள் நடிக்கும் நடிகர்களும் குறைவு, காமெடியில் சிரிக்க வைக்கும் நடிகர் நடிகைகளும் குறைவு.

ஆங்காங்கே ஒரு சில காட்சிகளிலாவது சிரிக்க வைக்க வேண்டும். இந்த ஜாக்பாட் படத்தின் டிரைலரைப் பார்த்த போது நமக்கும் படம் வரும் போது பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கப் போகிறோம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை சற்றே ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் கல்யாண்.

காமெடிப் படங்களுக்குக் கதையே தேவையில்லை, நல்ல நடிகர்கள் இருந்தால் போதும், நச்சென்று நான்கு காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தால் போதும், ரசிகர்கள் திருப்தியடைந்துவிடுவார்கள். இந்தப் படத்தில் நல்ல நடிகர்கள் கிடைத்துவிட்டார்கள், சுமாரான கதை கிடைத்துவிட்டது, காமெடிக்கான காட்சிகளை அமைக்க சரியான இடங்கள் இருந்தும் அங்கே வசனங்கள் சரியாக அமையவில்லை.

அண்ணன் மகள் ஜோதிகாவுடன் சேர்ந்து சின்னச் சின்ன ஏமாற்று வேலை மற்றும் திருட்டு வேலைகளில் ஈடுபடுபவர்
ஜோதிகாவும் ரேவதியும் சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்தவர்கள். போலீசிடம் சிக்காமல் சாமர்த்தியமாக ஏமாற்றி வரும் திரை அரங்கில் படம் பார்க்கும்போது ஏற்பட்ட பிரச்சனையின் போது போலீஸ் ஒருவரை தாக்குகிறார்கள். 

இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கு சச்சுவை
சந்திக்கிறார்கள். சச்சுவை ஒரு பெண் போலீஸ் அடிக்க அதைத் தட்டிக் கேட்டு ஜோதிகா அந்த பெண் போலீசாரை அடித்து துவம்சம் செய்கிறார்.

சிறையில் இருக்கும்
சச்சு மூலம் இவர்களுக்கு
ரேவதி மற்றும் ஜோதிகா அள்ள அள்ள குறையாத ஒரு அக்ஷய பாத்திரம் தொடர்பான துப்பு கிடைக்கிறது. பணக்காரரான ஆனந்த்ராஜ் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்ஷய பாத்திரத்தை பற்றி
இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த அக்ஷய பாத்திரம் எடுக்க அடிக்கடி ஆனந்தராஜ் வீட்டிற்குச் சென்று அதை எடுக்க முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களுக்குத் தோல்வி ஏற்படுகிறது. கடைசியில் அவர்கள் அந்த அட்சய பாத்திரத்தை ஆனந்த்ராஜூக்கு தெரியாமல்
எடுத்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுக்க வரும் ஜோதிகாவும், ரேவதியும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு நடித்துள்ளனர். நடிப்பு மற்றும் டான்சுக்கு பெயர்போன ஜோதிகா, இப்படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து, இருக்கிறார் அதிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

ஒபனிங் சாங், சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக் என ஆக்‌ஷன் ஹீரோயினாக மிளிர்கிறார் ஜோதிகா. ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை, இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ரேவதிக்கு முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை.

ஜாக்பாட் படத்தில் ஹீரோ இல்லாத குறையை ஹீரோயின் ஜோதிகா தீர்த்து வைத்துள்ளார். அவருக்காக இரண்டு, மூன்று சண்டைக் காட்சிகளையும் அமைத்திருக்கிறார் இயக்குனர். பறந்து பறந்து அடிக்கிறார். ஆரம்பத்தில் மட்டும் அவரை நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும், ஒரு திருடியாகவும் பார்க்க கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது. போகப் போக அவருடைய கதாபாத்திரத்திற்குள் நம்மையும் இழுத்துக் கொள்கிறார். வழக்கம் போல சில காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆகவே நடிக்கிறார்.

குலேபகாவலி படத்தில் பார்த்ததை விட இந்தப் படத்தில் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார் ரேவதி. அதற்காக, அந்தக் காலத்தில் கமல்ஹாசன், கார்த்தி ஆகியோர் காதலித்த ரேவதியை, இந்தப் படத்தில் மொட்ட ராஜேந்திரனை காதலிக்க வைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரியவில்லையா இயக்குனரே. படம் முழுவதும் இவரும் ஜோதிகாவும் நடிப்பதை விடவும், சண்டை போட்டதை விடவும், ஒரு பொய்யை எப்படித் திரித்துச் சொல்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோரைவிடவும் காமெடியில் ஓவர்டேக் செய்து செல்பவர் ஆனந்தராஜ் மட்டுமே. ரைஸ் மில் வைத்திருக்கும் அவர் தன்னைத் தானே தாதா என்று வேறு சொல்லிக் கொள்கிறார். அப்படிப்பட்டவர் ஜோதிகா, ரேவதியிடம் அடிக்கடி ஏமாந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அதிலும் அவர்கள் சொன்னபடி படத்தை எடுத்துக் கொண்டு ஆந்திரா பார்டர் செல்லும் போது தப்புத் தப்பாக எழுதி வைத்த தமிழைப் படித்து அவர் அடிக்கும் கமெண்ட்டுகளுக்கு தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பலை. இந்தக் காட்சியில் இருந்த சிரிப்பலையை படம் முழுவதும் வைத்திருக்க வேண்டும். படத்தில் இன்னொரு ஆனந்தராஜ், இல்லை.. இல்லை.. ஆனந்தி ராஜும் உண்டு. தாதாவின் அக்கா மானஸ்தியாக பெண் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் ஆனந்தராஜே நடித்திருக்கிறார். ஆஜானுபாகுவாக பல ஹீரோக்களை மிரட்டியவர், பெண் வேடத்தில் சிரிக்க வைத்திருக்கிறார். படத்தில் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கிறதோ இல்லையோ ஆனந்தராஜுக்கு டபுள் ஜாக்பாட்.

விஷால் சந்திரசேகர் பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பின்னணி இசை பரவாயில்லை. ஜோதிகாவுக்கு சண்டைப் பயிற்சி அளித்த மாஸ்டர் ராக்பிரபு அவர்களை மிகவும் பாராட்டுக்குரியவர்.

இந்த படத்தின் கதை எந்த ஊரில் நடக்கிறது கிராமத்தில் நடக்கிறதா அல்லது நகரத்தில் நடக்கிறதா என்பதில் மிகவும் குழப்பமாக இருக்கிறது. வீடு, வீடாக மட்டுமே மாற்றி மாற்றி காண்பித்துள்ளார்கள். செட்டுக்குள்ளேயே படத்தை முடித்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. சில முறை மட்டும் சாலைகளை காட்டுகிறார்கள்.

படத்திற்கு ஸ்கிரிப்ட்டை எழுதிய இயக்குனர் கல்யாண், அதை நகைச்சுவைப் படம் என எழுதிய பேப்பர்களை அந்த அட்சய பாத்திரத்திற்குள் போட்டிருந்தால் கூட இன்னும் கூடுதலான நகைச்சுவைக் காட்சிகள் வந்திருக்குமோ…?.

ஜாக்பாட் – ஒ கே பாஸ்…! ஒரு முறை பார்க்கலாம்