ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘பேஜ்லர்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் சதிஷ் இயக்கும் இந்த படத்திற்கு ‘பேஜ்லர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் “கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்… கமிட் ஆனா உம்முனு இருக்கனும்…பேஜ்லர்னா ஜம்முனு இருக்கலாம்..” என பதிவிட்டுள்ளார்.