ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 4 ஜி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பாக்கர் இன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரமாண்டமாக திரைப்படங்களை எடுப்பதற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கரிடம் ஐ திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றியவர்.

கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத். ( வெங்கட் பாக்கர் )
வயது 35 தமிழ் திரைப்பட உலகில் மிக பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு புறப்பட்டு வந்த அவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

அருண் பிரசாத்
தனது பெயரை ( வெங்கட் பாக்கர் ) என்று மாற்றிக் கொண்டு ஜி.வி. பிரகாஷ் குமாரை கதாநாயகனாக வைத்து 4ஜி என்ற திரைப்படத்தை இயக்கி வரும்.

சி.வி. குமார் தயாரித்துள்ள அந்த திரைப்படத்தில் காயத்ரி சுரேஷ், சதீஷ், சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த 4G திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் இசையமைக்கவும் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அருண் பிரசாத் ( வெங்கட் பாக்கர் ) தனது சொந்த ஊரான அன்னூரில் தங்கியிருந்தார்.

இன்று காலை அவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளைத்திற்கு சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இயக்குனர் அருண் பிரசாத் ( வெங்கட் பாக்கர் ) இறந்த தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்படம் முடிந்து வெளியாகும் முன்னரே மண்ணுலகை விட்டு சென்றுவிட்டார்.

இயக்குனர் அருண் பிரசாத் ( வெங்கட் பாக்கர் ) மறைவு 4ஜி திரைப்படத்தின் குழுவினரை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

4ஜி திரைப்படத்தின் கதாநாயகன் ஜிவி.பிரகாஷ்குமார் கூறுகையில், நல்ல மனிதர், திறமையான இயக்குனர். திட்டமிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை முடித்தார். இன்னும் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. அவரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

ஜிவி.பிரகாஷ்குமார் டுவிட்டரில், எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் எனது இயக்குனர் வெங்கட் பாக்கர்(அருண் பிரசாத்) இன்று காலை நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயர் உற்றேன். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/gvprakash/status/1261203745741787136?s=19