ஜீ.வி.பிரகாஷின் தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். முதலில் இசையமைப்பாளராகி பின்னர் சினிமா ஹீரோவாக ட்ரான்ஸ்பார்ம் ஆனவர் அவர்.

தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவுக்கு வருகிறார். ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.