ஜூலை காற்றில் விமர்சனம்

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரித்திருக்கும் ஜூலை காற்றில் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் கே.சி.சுந்தரம்.
இதில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், முத்துராமன்ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சேவியர்எட்வர்ட்ஸ், கலை இயக்குநர்- ஜெயக்குமார், பாடல்கள்-நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி, சௌந்தரராஜன்,இணை தயாரிப்பாளர் – கருப்பையா, இசை- ஜோஸ்வா ஸ்ரீதர், நடனம்- விஷ்வகிரண் நம்பி, ஸ்ரீசெல்வி, படத்தொகுப்பு-அனுசரண், மக்கள் தொடர்பு-யுவராஜ்.
ஆனந்த் நாக் அஞ்சு குரியனை பார்த்தவுடன் நட்பாக பழகுகிறார். நாளடைவில் காதலாக மாறி நிச்சயம் வரை செல்கிறது. இருந்தாலும் ஆனந்த் நாக் திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் போது புகைப்பட கலைஞர் சம்யுக்தா மேனனை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் வர, அஞ்சு குரியனுடன் நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி விட்டு சம்யுக்தா பின் செல்கிறார். ஆனந்த் நாக்கின் தொந்தரவு பிடிக்காமல் சம்யுக்தாவும் விலகுகிறார். அதன் பின் ஆனந்த் நாக் என்ன ஆனார்? நிச்சயித்த பெண்ணையும், காதலித்த பெண்ணையும் கை விட்ட பிறகு எடுத்த முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் ஆகியோர் முக்கோண காதலர்களாகவும், காமெடிக்கு சதீஷ், அப்பாவாக முத்துராமன் என்று அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சேவியர் எட்வர்ட்ஸ்சின் ஒளிப்பதிவு, ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையும் படத்திற்கு பலம்.
கதை, இயக்கம்- கே.சி.சுந்தரம். நாயகனுக்கு வரும் காதல் எது உண்மையானது என்பதை முக்கோணக் காதல் கதையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் கே.சி.சுந்தரம். அவரவர் பார்வையில் காதல் பயணிப்பதை முதல் பாதியில் சொல்லி இரண்டாம் பாதியில் காதலை தேடி அலையும் நாயகன் வெற்றி பெற்றானா? இல்லையா? என்ற குழப்பமான காதல் கதையை முடிந்தவரை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.சி.சுந்தரம்.
மொத்தத்தில் இன்னும் பலமாக ஜூலை காற்று வீச வேண்டும்.