Wednesday, July 15
Shadow

ஜென்டில்மேன் திரைப்படத்தின் காமெடியை படத்தலைப்பாக்கிய நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் முதன் முறையாக முன்று வேடங்களில் நடித்து வரும் திரைப்படம்தான் டிக்கிலோனா.

1993 வருடம் வெளி வந்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி காட்சியில் இந்த டிக்கிலோனா என்ற வார்த்தை ஒரு விளையாட்டுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதாவது ஒருவரின் பின்னால் உள்ள பகுதியை மற்றொருவர் வந்து பின்னாலேயே மோதுவதாக காட்சி இருக்கும். அந்த ஆபாச விளையாட்டுதான் தற்போது இந்த திரைப்படத்தின் தலைப்பு ஆகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் உடன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகை அனகா மற்றும் ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் அடுத்தடுத்து போஸ்டர் லுக்குகள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.