ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க களமிறங்கும் பிரபல நடிகை

தமிழி சினிமாவில் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இதனை தொடர்ந்து ‘ஆரம்பம், ‘வை ராஜா வை’ உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்து இருந்தார். இவர் தற்போது முழு நேர பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கவுள்ளார். அதன்படி இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் ஜெயம் ரவியின் 25வது படத்தில் நடிகை டாப்ஸி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.