ஜெயம்’ ரவியின் 25வது படம் குறித்த அறிவிப்பு

2003-ம் ஆண்டு ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் அண்ணன் மோகன் ராஜா படங்களில் நடித்து வந்த இவர், பின் இதர இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தனது 24-வது படமாக குறும்பட இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், தனது 25-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரவி. அதன்படி, இயக்குநர் லக்‌ஷ்மன் இயக்கத்தில் முழுக்க முழுக்க விவசாயின் பிரச்னைகள் பேசும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார்.