ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி’ திரைப்படம் திரையிடுவதில் சிக்கல்
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி இந்த கதையை கடந்த 2014ம் ஆண்டு எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். தற்போது ‘கோமாளி’ படத்தின் கதையும் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதையும் ஒரே மாதிரி உள்ளது. இது தொடர்பாக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் படத்திற்கு தடை கோரவும் எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.