ஜெயம் ரவி படத்திற்கு இந்திய தேசிய கீத பாடல் தலைப்பு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‛கோமாளி’ படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து போகன் பட இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

லஷ்மண் இயக்கவுள்ள இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிக்கிறார்.

இந்த படத்தை அடுத்து அகமது இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ராணுவ வீரராக நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்திற்கு ‘ஜனகனமன’ என்ற நம் இந்திய தேசிய கீத படத்தலைப்பை வைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனிடையில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது.