ஜெயலலிதா படத்தை பேனரில் இணைத்த டி.. ராஜேந்தர்

நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் கட்சிப் பலகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர்கள் பலரும் அரசியல் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்24ல் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக லட்சிய திமுவின் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநரான டி ராஜேந்தர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். இதைத்தொடர்ந்து தனது கட்சிப் பலகையை அவர் திறந்து வைத்தார். அதில் ஜெயலலிதாவின் படத்தை டி ராஜேந்தர் சேர்த்துள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்களை தொடர்ந்து ஜெயலலிதாவின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. என்றார்.
.