ஜோதிகாவின் கலகலப்பான நடிப்பில் வெளிவரும் ‘ஜாக்பாட்’!

ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ராட்சசி’. மிகவும் கண்டிப்பான ஆசிரியராக தோன்றி நடிப்பு ராட்சசியாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஆனால், ஜாக்பாட் படமோ ராட்சசிக்கு நேர் எதிராக மிகவும் கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருக்கும் ஜோதிகா தோன்றுவார் என்கிறார் இயக்குனர்.

இப்படத்தில் வரும் காமெடி காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், நடனம், என அனைத்திலும் ஜோதிகாவின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். இதில் நடித்த மற்ற நடிகர்களான மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், விஜய் டிவி தங்கதுரை, கிங்ஸ்லி, கும்கி அஸ்வின், ஜெகன் என அனைவரும் காமெடி காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

அதிலும், ஜோதிகாவின் ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் அனைவராலும் பாராட்டப்படும் என்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண்.

2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்த இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேல் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

வரும் வெள்ளியன்று ’ஜாக்பாட்’ திரைக்கு வர இருக்கிறது.