டயானாவகா இருந்தவர் நயன்தாராவாக மாறியது எப்படி- நடிகை சீமா

தென்னிந்தியா திரை உலகில் லேடி  சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழ் பெற்றது மட்டுமின்றி அவரது படங்கள் நல்ல ஓப்பனிங் வசூலையும் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘தர்பார்’, தளபதி ‘விஜய்யுடன் ‘பிகில்’, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘சயிர நரசிம்மரெட்டி போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு தொடக்கமே ‘விஸ்வாசம்’, என்ற வெற்றிப்படத்துடன் தொடங்கியது

இந்த நிலையில் நயன்தாராவுக்கு ‘நயன்தாரா’ என்ற் பெயரை தேர்வு செய்ததே நான் தான் என பழம்பெரும் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை சீமா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நடிகை நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டு ‘Manassinakkare’ என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான போது, அவரய்ஜி இயற்பெயரான டயானா என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் சத்யன் விரும்பவில்லை. இதனையடுத்து அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சீமாவிடம் இயக்குனர்  சத்யன், நயன்தாராவுக்காக ஒரு நல்ல பெயரை தேர்வு செய்யுமாறு நடிகை சீனாவிடம் கேட்டு  கொண்டதாகவும் அதன்பின்னர் ஒருசில பெயர்களை பரிசீலித்த பின்னர் நயன்தாரா என்ற பெயரை தான் சொன்னதை இயக்குனர் ஏற்றுக்கொண்டதாகவும் நடிகை சீமா அந்த பேட்டியில் கூறியுள்ளார். நயன்தாரா என்றால் பெரிய ஸ்டார் என்று அர்த்தம் என்றும், பெயருக்கேற்றவாறே அவர் இன்று பெரிய ஸ்டாராக இருப்பதாகவும் சீமா மேலும் அந்த பேட்டியில் தெரிவித்தார்