தடைகளை தகர்த்து திரைக்கு வருகிறது ‘நுங்கம்பாக்கம்’⁉

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவாதி கொலையை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற தலைப்பில் புதிய படம் உருவானது. இதனை ரமேஷ் செல்வன் என்பவர் இயக்கினார். ஆனால் இந்த படத்திற்கு வந்த எதிர்ப்பு காரணமாக ‘நுங்கம்பாக்கம்’ என தலைப்பு மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு விசிக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் “இந்த படத்தை வெளியிடுவதற்கு எந்த சிக்கலும் இருக்காது” என கூறியுள்ளார்.