தண்ணீரில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது – நடிகர் விவேக் வருத்தம்

தன்னுடன் படித்த மாணவர்களை கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்த நடிகர் விவேக் மரக்கன்றுகளை நாட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரம் போல, தமிழகம் தண்ணீர் இல்லாத மாநிலமாக மாறிவருவது கவலை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரும் நடவடிக்கையை துரிதப்படுத்தி, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டர். தொடர்ந்து பேசிய அவர், ⛈மழையை கொண்டுவரும் ஆற்றல் மரங்களுக்கு உண்டு என்பதால் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆசைப்பட்ட ஒருகோடி மரம் நடும் கனவில், 30 லட்சத்தி 23 ஆயிரம் மரங்களை நட்டுள்ளதாக தெரிவித்தார்.