தனது அடுத்த கனவினை தேடி செல்ல விரும்பும் சாய் பல்லவி.

பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி அனைவரிடமும் அறிமுகமான சாய் பல்லவி அதன் பின்னர், மலையாள படமான ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘மாரி-2’ படத்தில் இவர் தனுஷுடன் இணைந்து நடனமாடி தமிழிலும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் இந்நிலையில் அவரிடம் உங்களுடைய எதிர்கால கனவு என்னவென்று⁉ கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது தற்போது நிறைவேறி விட்டது. அடுத்ததாக என்னுடைய ஆசை நான் படித்த டாக்டர் வேலையை செய்ய வேண்டும் அதாவது மருத்துவப்பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய அடுத்த கனவு” என்று கூறியுள்ளார்.