தனது அண்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்

சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ரஜினிகாந்த் தன் அண்ணன் வளர்ப்பில் தான் வளர்ந்தார்.

எனவே தன் அண்ணன் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார்.

இவரது அண்ணன் சத்யநாராயணா ராவ் பெங்களூரில் வசித்து வருகிறார்.

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.

இதனால் தர்பார் சூட்டிங்கிலிருந்து அவரசமாக கிளம்பி பெங்களூருக்கு வந்து அண்ணன் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது டாக்டர்கள் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

ரஜினியை வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

பின்னர் தர்பார் சூட்டிங்கு மீண்டும் ஜெய்ப்பூர் கிளம்பிச் சென்றார் ரஜினிகாந்த்.