தனது திருமணம் குறித்து ‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன்
‘மூடர் கூடம்’ என்ற ஒரே ஒரு படத்தால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் நவீன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, படத்தில் முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சிந்துவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது பதிவுத்திருமணம் மற்றும் மத நம்பிக்கை குறித்து இயக்குனர் நவீன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதி மத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதன் இணைப்பு 👇🏼
எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம் pic.twitter.com/F0rpz5Q2n9
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) April 16, 2019