தனி ஒருவன்’ மிக பெரிய உழைப்பு, ஜாக்கிரதை – இயக்குநர் ராம்

‘கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மோகன்ராஜா பதிவு செய்து இருக்கும் டீவீட்டில் “‘தனி ஒருவன் 2’ படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்ப்பார்ப்பை ரீச் பண்ணிடலாம்ல என உதவி இயக்குநர்களிடம் கேட்டேன், 200% பண்ணிடலாம் என்றனர்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதேவேளையில் இயக்குநர் ராம் தன்னை அலைபேசியில் அழைத்து “ராஜா மறுபடி ‘தனி ஒருவன்’ பாத்துட்டு இருக்கேன். மிகப் பெரிய உழைப்பு, எப்படி இப்படி அடுத்த பார்ட் ஜாக்கிரதையா பண்ணுங்க” என்று கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.