தமிழக அரசின் கிரீன் சிக்னல் கிடைச்சா ‘மாநாடு’ படப்பிடிப்பு உடனேஆரம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி உதயா எஸ்.ஏ சந்திரசேகர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரானோ வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இன்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்த அரசு இன்னும் அனுமதிக்கவில்லை.

இருந்த போதிலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு திரைப்பட ‘அப்டேட்’ தருமாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…

“எல்லோரும் ‘மாநாடு’ பட அப்டேட் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுமதி கிடைத்ததும் உடனடியாக சூட்டிங்கை ஆரம்பிப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.