தமிழக ஏரி குளங்களை தூர் வாரும் ரசிகர்கள்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சி
முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்து விட்டு, சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது-..
தர்பார் படம் எடுக்கப்பட்ட வரையில் மிக சிறப்பாக வந்துள்ளது.
படம் திட்டமிட்டபடி, அடுத்தாண்டு ஜனவரி 14ல், அதாவது பொங்கல் நாளில் ரிலீசாகும்.
தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பதற்காக, எனது ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சியாக உள்ளது.
மாவட்டம் தோறும் தன்னிச்சையாக செய்து கொண்டிருக்கின்றனர். நான் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்.
அவர்களின் அந்தப் பணி தொடர வேண்டும். தண்ணீர் தேவைக்கான பணிகளில், எல்லோரும் இதைப் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும்.” என் பேசினார் ரஜினிகாந்த்.