தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்*

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்ற திருமாவளவன், சுமார் 1மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியைத் தனி தொகுதியாக அறிவிக்கவேண்டும். தலித்/பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் (கல்வி உதவித் தொகை)வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.