தமிழக முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்த நகைச்சுவை பிரபலம் !*
கோலிவுட் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தற்போது திருமண வேலையை இருவீட்டார்களும் கவனித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சதீஷ் தனது திருமண அழைப்பிதழை பிரபலங்களுக்கு வழங்கும் பணியை துவங்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.