தமிழ்க முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இணைவது குறித்து – நடிகை ஸ்ரீப்ரியா*
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இணைந்து களமிறங்குவது குறித்து அடுத்தடுத்து கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினருமான ஸ்ரீப்ரியா இது குறித்து கூறுகையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்தால் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் “யாருடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென கமல்ஹாசன் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம்” எனவும் கூறியுள்ளார்.